×

வாரச்சந்தையில் தராசு எடைக்கற்கள் பறிமுதல்

சிவகங்கை, ஜன.29:  சிவகங்கை தொழிலாளர் உதவி ஆணையர்(அமலாக்கம்) ராஜ்குமார் தலைமையில், தொழிலாளர் உதவி ஆய்வாளர்கள் சேதுராஜ், தயாநிதி, செந்தில்குமார், பேச்சிமுத்து, பிரியதர்ஷினி மற்றும் முத்திரை ஆய்வாளர் கதிரவன் ஆகியோர் காளையார்கோவில் வராச்சந்தையில் திடீர் ஆய்வு நடத்தினர். பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இதில் முத்திரையிடப்படாத மின்னணு தராசுகள்-10, மேஜை தராசுகள்-7, விட்டத்தராசுகள்-10, இரும்பு எடைக்கற்கள் 65, அளவைகள் 5 மற்றும் தரப்படுத்தப்படாத எடைகள்-4 என மொத்தம் 101 எடையளவைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

முத்திரையிடப்படாமல் எடையளவுகள் பயன்படுத்தினால் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்றும், எடையளவுகளை முத்திரையிட்டு பயன்படுத்துமாறும், மின்னணு தராசுகள் வருடத்திற்கு ஒரு முறையும், விட்ட தராசுகள் மற்றும் படிக்கற்கள் இரண்டு வருடத்திற்கு ஒரு முறையும் முத்திரையிட்டும், அதன் சான்றிதழை உடன் வைத்திருக்குமாறும் வியாபாரிகள் அறிவுறுத்தப்பட்டனர். 

Tags :
× RELATED கட்டிட மேஸ்திரி வீட்டில் 10 கிராம் நகை திருட்டு